தமிழக செய்திகள்

வெள்ளிமலை பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்

வெள்ளிமலை பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் கல்வராயன்மலை ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வெள்ளிமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, உதவி பொறியாளர் அருண் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கல்வராயன்மலை வெள்ளிமலை பஸ் நிலையத்தை புனரமைத்து, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெயரை சூட்டுவது, பஸ் நிலைய நுழைவு பகுதியில் கருணாநிதி நூற்றாண்டு விழா நுழைவு வாயில் என அமைப்பது, மலை கிராங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், சின்னதம்பி மற்றும் கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...