தமிழக செய்திகள்

வெள்ளிமலை முருகன் கோவில் தேரோட்டம்

வேடசந்தூர் அருகே தைப்பூசத்தையொட்டி வெள்ளிமலை முருகன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.

வேடசந்தூர் அருகே வெள்ளிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூசத்தையொட்டி நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இதில் வெள்ளிமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தாகள் கலந்து கொண்டு பால் காவடி எடுத்து வந்தனர். பின்னர் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த நிகழ்ச்சியில், நடுப்பட்டி ஊர் கவுண்டர் ஜெயராமன், நடுப்பட்டி ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், 4-வது வார்டு உறுப்பினரும், பா.ஜ.க. ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய துணைத்தலைவருமான மகுடீஸ்வரன், தி.மு.க. இளைஞர் அணி கிளை செயலாளர் கார்த்தி, பா.ஜ.க. கூட்டுறவு சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு