தமிழக செய்திகள்

வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் வேலூர் அண்ணாசாலையில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, மாவட்ட ஊராட்சிமன்ற செயலாளர் சாந்தி, கண்காணிப்பாளர் எழிலரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் மற்றும் தீர்மானங்களை ஊராட்சிக்குழு உதவியாளர் காந்தி வாசித்தார். இதில், மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

கூட்டத்தில், பேரணாம்பட்டு ஒன்றியம் எம்.வி.குப்பம் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் தடுப்புச்சுவர் அமைக்க ரூ.11 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது, மாவட்ட ஊராட்சிக்கு வரப்பெற்ற மாநில நிதிக்குழு மானிய தொகையில் இருந்து மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கு வளர்ச்சி திட்ட பணிகள் எடுத்து செய்வதற்கு அனுமதி கோருவது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்