தமிழக செய்திகள்

வேலூர்; வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டி கணவர் கைது

வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சேகர்-ரேவதி தம்பதிக்கு, 3 பெண்கள் பிள்ளைகள் உள்ள நிலையில், இரண்டு மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரேவதி சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிட்டும், வீடியோ காலில் பேசியும் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனிடையே ரேவதி மீண்டும் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவரிடம் சேகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த சேகர், வீட்டில் இருந்த அரிவாள்மனையால் ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்து, அலறித் துடித்த ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தெடர்பாக போலீசார் சேகரை கைது செய்து விசாரணை மேற்கெண்டு வருகின்றனர். வீடியோ காலில் பேசிய மனைவியின் கையை கணவர் வெட்டிய சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து