வேலூர்,
வேலூர் மக்களவை தொகுதியில் வருகிற ஆகஸ்ட் 5ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ந்தேதி நடைபெறும்.
வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி. சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கட்சியின் வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக இன்று வேலூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதன்படி இன்று காலை உழவர் சந்தை வழியே நடைபயிற்சி செய்த அவர் அங்கிருந்த காய்கறி விற்பனை செய்வோர், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர்களுடன் ஸ்டாலின் செல்பி எடுத்து கொண்டார்.