தமிழக செய்திகள்

சிம்மவாகனத்தில் வேம்படி மாரியம்மன் வீதிஉலா

வலங்கைமான் சிம்மவாகனத்தில் வேம்படி மாரியம்மன் வீதிஉலா

வலங்கைமான்:

வலங்கைமான் செட்டி தெருவில் வேம்படி மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 19-ந்ததி (ஞாயிற்றுக்கிழமை) மாலை செடில் திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. தொடர்ந்து 5-ந்தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 12-ந்தேதி இரண்டாம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தினசரி வீதி உலா முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்று வருகிறது. அதை அடுத்து நேற்று சிம்ம வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து வருகிற 19-ந்தேதி பங்குனி முதல் ஞாயிறு அன்று செடில் திருவிழா நடக்கிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை