கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

7 மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

7 மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவடைந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நிறைவடைந்துள்ள நிலையில், 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதுவரை தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இந்த தனி கிடங்குகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்னணு ஓட்டு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்களின் முதல்கட்ட சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், வேலூர், காஞ்சீபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இந்த முதல்கட்டப் பணி நிறைவடைந்து உள்ளது. மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு