தமிழக செய்திகள்

பொட்டல்புதூரில் கால்நடை மருத்துவ முகாம்

பொட்டல்புதூரில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

தினத்தந்தி

கடையம்:

பொட்டல்புதூர் ஊராட்சியில் புதுத்தெருவில் சமுதாய நலக்கூடம் அருகே கால்நடை பராமரிப்பு மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இணைந்து சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு கால்நடை உதவி மருத்துவர் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார், கால்நடை ஆய்வாளர் முத்துக்குமார், உதவியாளர் அப்பாஸ், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அணித்தலைவர் விசுவராஜ், வட்டார அணி செயல் அலுவலர் முருகன், வீரப்பன், பண்ணை பயிற்சி பள்ளி பயிற்சியாளர் முப்பெருந்தேவி, ஊர் நாட்டாமை மாரியப்பன், கண்ணன், உறுப்பினர் ப்ரியா, ஊராட்சி செயலாளர் ஜெயசிங் ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். சமுதாய சமுதாய பண்ணை பள்ளியின் மூலம் பயன்பெறும் கால்நடை பராமரிப்பாளர்களின் புறக்கடை கோழி வளர்ப்பு, கால்நடைகளுக்கு கிருமி நீக்கம், மருந்து, குடற்புழு நீக்கம் உட்பட பல சிகிச்சைகள் நடைபெற்றன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்