தமிழக செய்திகள்

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

மணக்காடு ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

தினத்தந்தி

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காடு ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் விஜயகுமார், உதவி இயக்குனர் ஆசான் இப்ராகிம் அறிவுரையின் பேரில், கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கால்நடை உதவி டாக்டர்கள் சரவணகுமார், சண்முகநாதன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், குடற்புழு நீக்கம், ஆடு மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி என 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.. இதில் சிறந்த கன்றுகள் மற்றும் சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து