தமிழக செய்திகள்

தமிழக போலீசாருக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடியினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்

தமிழக போலீஸ் துறைக்கு மிக உயரிய ஜனாதிபதி சிறப்பு கொடியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்

தினத்தந்தி

சென்னை,

தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் தமிழகம் தான்.

தமிழக போலீஸ் துறைக்கு கவுரவமிக்க ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்று வருகிறது

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். துணை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு தமிழக போலீசார் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக போலீஸ் துறைக்கு ஜனாதிபதி கொடியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். ஜனாதிபதியின் சிறப்பு கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு