தமிழக செய்திகள்

புயல் பாதிப்புகளை பார்வையிட கவர்னருடன் சென்ற அதிகாரிகளின் வாகனங்கள் சிறைபிடிப்பு

திருத்துறைப்பூண்டி அருகே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட கவர்னருடன் சென்ற அதிகாரிகளின் வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

திருவாரூர்,

நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் காலை நாகை வந்தார். முதல் நாளான நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று 2-வது நாளாக திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். திருவாரூரில் பல இடங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை காரில் இருந்தபடியே கவர்னர் பார்வையிட்டு சென்றார். அப்போது அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் கவர்னரை சந்தித்து முறையிடுவதற்காக ரோட்டின் இருபுறமும் நின்றுகொண்டு இருந்தனர். ஆனால் கவர்னரின் கார் அங்கு நிற்காமல் கடந்துசென்றது.

இதனால் அங்கு நின்றுகொண்டு இருந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து, கவர்னருடன் வந்த அதிகாரிகள் மற்றும் சில பாதுகாப்பு வாகனங்களை வழிமறித்து சிறைபிடித்தனர். அந்த பகுதியில் சாய்ந்துகிடந்த மரங்களை ரோட்டின் குறுக்கே இழுத்துப்போட்டனர். இதனால் கவர்னர் மற்றும் அவரது சில பாதுகாப்பு வாகனங்கள் மட்டும் அந்த இடத்தை கடந்துசென்றன.

மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி, திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சந்துரு ஆகியோரது வாகனங்களும், கவர்னரின் சில பாதுகாப்பு வாகனங்களும் சிக்கிக்கொண்டன.

மன்னார்குடி உதவி கலெக்டர் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நிவாரண நடவடிக்கைகள் உடனடி யாக மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு