தமிழக செய்திகள்

அண்ணா மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை; வழக்கு பதிவு

அண்ணா மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவும் செய்துள்ளன.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் ராஜாராம். இவர் மீது பல்கலைக்கழக பேராசிரியர் தேர்வில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வந்தன.

இந்த நிலையில், தேனியில் உள்ள இவரது உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது. சென்னை, தேனியில் ராஜாராமுக்கு உரிய 7 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.20 கோடி மதிப்புள்ள 65 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதேபோன்று அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடிக்கு சொந்தமான 6 இடங்களில் நடந்த சோதனையில் 74 ஆவணங்கள் மற்றும் ரூ.95 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், முன்னாள் துணைவேந்தர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை