சென்னை,
தவெக தலைவர் விஜய் இன்று சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றார். தவெக நிர்வாகிகள் மத்தியில் பிரசார வேனில் நின்றபடி பேசிய விஜய், திமுக, அதிமுகவை விமர்சித்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது,
விஜய் அரசியலில் அனுபவம் இல்லாதவர். அவர் முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். குடும்பத்துடன் நல்ல உறவு வைக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கத்தை நல்ல முறையில் கூற வேண்டும்.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? இதுதான் விஜய்க்கு பதில். 32 சதவீத வாக்கு உள்ளது என்று நடிகராக உள்ள விஜய் கூற முடியுமா? விஜய் எனக்கு ஒரு ஆளே கிடையாது. கூட்டம் இருந்தால் என்ன வாக்கு வேண்டாமா? விஜயகாந்திற்கு கூடாத கூட்டமா? வாக்கு வேண்டாமா? விஜய் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது.
என்றார்.