சென்னை,
தவெக தலைவர் விஜய் இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியிலும், சென்னை வில்லிவாக்கம், அண்னாநகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக விஜய் தனது பனையூர் இல்லத்தில் இருந்து காரில் கிளம்பிய விஜய், பாதி வழியில் பிரசார வேனில் ஏறினார். வேனில் நின்றபடி இருபக்கமும் திரண்டு நின்ற தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி வந்தார்.
அப்போது தவெக தொண்டர்கள் விஜய்க்கு பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர். திருவள்ளூருக்கு செல்லும் வழியில் புதிதாக திருமணமான ஜோடி ஒன்று விஜய்யை பார்க்க சாலையோரத்தில் காத்திருந்தது. இதனை கவனித்த விஜய், அந்த ஜோடியை தனது வேனில் ஏற்றி வாழ்த்து கூறினார். விஜய் ரோடு ஷோ காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.