நடிகரும் தவெக தலைவருமான விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதையொட்டி, வியாசர்பாடி தேர்தல் அலுவலகத்தில் கடந்த 30 ஆம் தேதி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து பெரம்பூர் பகுதியில் தனது பிரசாரத்தைத் தொடங்கி மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
பெரம்பூரைத் தொடர்ந்து கொளத்தூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், பிரசாரத்தை திடீரென நிறுத்திவிட்டு விஜய் வீடு திரும்பினார். தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிகளில் விஜய்யின் வாகனத்திற்கு போதிய காவல்துறை பாதுகாப்பு இல்லை என்றும் போக்குவரத்தைச் சரி செய்யாமல் இருப்பதால் பிரசாரம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தவெக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்தும் தவெக நிர்வாகிகள் புகாரளித்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவது இல்லை என்றும் ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள விஜயிக்கு போதிய பாதுகாப்பு வழங்க அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.