தமிழக செய்திகள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜய் கம்லேஷ் தஹில் ரமானி பதவியேற்றார்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜய் கம்லேஷ் தஹில் ரமானி இன்று பதவியேற்று கொண்டார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஹூலுவாடி ஜி.ரமேஷ் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் விஜய கம்லேஷ் தஹில் ரமானியை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தலைமை நீதிபதியாக விஜய கம்லேஷ் தஹில் ரமானி இன்று பதவி ஏற்று கொண்டார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் 3வது பெண் தலைமை நீதிபதி ஆவார்.

அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக சமீபத்தில் பதவியேற்ற இந்திரா பானர்ஜியும் பங்கேற்றார்.

அவர்களுடன் நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ், டி. ராஜா, புஷ்பா சத்தியநாராயணா, சுந்தரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2001ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக தஹில் ரமானி நியமனம் செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் 2017ம் ஆண்டில் மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை