தமிழக செய்திகள்

விஜய கரிசல்குளம் அகழாய்வில் கிடைத்த பழங்கால செங்கல்

விஜய கரிசல்குளம் அகழாய்வில் பழங்கால செங்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தாயில்பட்டி

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. பண்டைய காலத்தில் பயன்படுத்திய எடை கற்கள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல் உள்பட 1,970 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது 36 செ.மீ. நீளம், அகலம் 16 செ.மீ.தடிமன், 6 செ.மீ. உள்ள முழுமையான செங்கல் கிடைத்துள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் செங்கலை விட நீளம் மற்றும் அகலம் கூடுதலாக உள்ளது. இதன்மூலம் பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் செங்கல் வைத்து கட்டிடங்கள் கட்டி உள்ளனர் என்பதை அறிய முடிகிறது. தற்போது செங்கல், மண்பாண்ட ஓடுகள், கருங்கற்கள், மட்டுமே தொடர்ந்து கிடைத்து வருவதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...