தமிழக செய்திகள்

பட்டாசு விபத்துகளை தடுக்க தனிக்குழு அமைக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

பட்டாசு விபத்துகளை தடுக்க தனிக்குழுவை அமைத்து அரசு கண்காணிக்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சிவகாசி அருகே உள்ள ஆ.புதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தது புதுவருட பிறப்பில் பெரும் சோகம் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில புத்தாண்டு நன்நாளில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆ.புதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி, 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

இனிவரும் காலங்களில் பட்டாசு விபத்துகளை தடுக்க, உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக தமிழக அரசு துறை சார்ந்த தனிக்குழுவை அமைத்து பட்டாசு ஆலைகளை கண்காணிக்க வேண்டும். பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்