தமிழக செய்திகள்

ஆட்சியை காப்பாற்றுவதிலேயே அதிமுகவினர் கவனமாக இருக்கிறார்கள் விஜயகாந்த் குற்றச்சாட்டு

ஆட்சியை காப்பாறுவதிலேயே அதிமுகவினர் கவனமாக இருக்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டிஉள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பலர் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளுதல், வீடுகளில் மழைநீர் தேங்குவதை தடுத்தல், குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உடல் நலம் குறித்து விசாரித்து வருகிறது. திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோன்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெங்குவால் பாதிக்கபட்டவர்களை பார்த்து நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்.

இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசுமருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் விசாரித்தார். அப்போது அவர் ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். பின்னர் அனைவருக்கும் ரொட்டி, பழம் போன்றவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் செயல்பாடு மோசமாக உள்ளது. டெங்குவால் உயிரிழப்பு இல்லை என்று மருத்துவர்கள் சொல்லவே செய்வார்கள். டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்.

ஆட்சியை காப்பாற்றுவதிலேயே அதிமுகவினர் கவனமாக இருக்கிறார்கள், என்றார்.

தமிழகத்தில் மட்டும் டெங்கு இல்லை இந்தியா முழுவதும் டெங்குவின் பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் மத்தியக்குழு தாமதமாக ஆய்வு செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததே டெங்குவை கட்டுப்படுத்தாதற்கு ஒரு காரணமாகும், டெங்கு காய்ச்சலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் விஜயகாந்த் பேசிஉள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்