தமிழக செய்திகள்

"பத்மபூஷன் - காலம் கடந்து கொடுக்கப்பட்ட விருது" - பிரேமலதா பேட்டி

விஜயகாந்த் மீது அன்பு வைத்திருந்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதை சமர்ப்பிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"விஜயகாந்த் உயிருடன் இருந்த காலத்திலேயே விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். விஜயகாந்த் இருந்தபோதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக பெற்றிருப்போம். விஜயகாந்த் மறைந்து 30 நாட்களுக்கு பிறகு இந்த சிறப்பை மத்திய அரசு கொடுத்துள்ளது. விஜயகாந்த் மீது அன்பு வைத்திருந்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதை சமர்ப்பிக்கிறோம்.

பவதாரிணி மறைந்தது மிகப்பெரிய இழப்பு. பவதாரிணியை சின்ன குழந்தையாக இருந்த போதிருந்து பார்த்திருக்கிறேன். பவதாரிணியின் இனிய குரலை இனி கேட்க முடியாது என்பதே வேதனைதான்" இவ்வாறு அவர் கூறினார். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை