சென்னை,
தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. தற்போது, அவரது நினைவிடத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
இந்த நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சமூக வலைதளமான எக்ஸ் தள கணக்கை தனது பெயருக்கு அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாற்றியுள்ளார். விஜயகாந்த் மறைந்து சில நாட்களிலேயே, அவரின் சமூக வலைதள கணக்கு நீக்கப்பட்டு வேறு பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் இடையே பேசுபொருளாகியுள்ளது.