தமிழக செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள்; தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், எளிய மக்கள் மீது பேரன்பு கொண்ட பண்பாளருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேப்டன் விஜயகாந்த் அவர்கள், நீண்ட ஆயுளுடன், நிறைந்த நலன்களுடன் மக்கள் பணி தொடர வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது