தமிழக செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் பணியில் இருந்த போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைகண்டித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கிராம உதவியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு வருவாய் அலுவலர் சங்கம் ஆகிய சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலை செய்யக்கூடிய அரசு அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பை தர வேண்டும். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் உரிய சட்ட திருத்தம் செய்து ஆணையாக வெளியிட வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைபோல திருத்தணி தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து