தமிழக செய்திகள்

10 மாதம் சம்பளம் வழங்காததால் கிராம நிர்வாக அலுவலர் விஷம் தின்று தற்கொலை

10 மாதம் சம்பளம் வழங்காததால் கிராம நிர்வாக அலுவலர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

பாப்பிரெட்டிப்பட்டி:

10 மாதம் சம்பளம் வழங்காததால் கிராம நிர்வாக அலுவலர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

கிராம நிர்வாக அலுவலர்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 53). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நடுப்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 18-ந் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்றார். பின்னர் அவர் தான் விஷம் தின்று விட்டதாக உதவியாளரிடம் கூறினார்.

இதுகுறித்து உதவியாளர் சிவலிங்கத்தின் மகன் தட்சிணாமூர்த்திக்கு தகவல் கொடுத்தார். பின்னர் உதவியாளர் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிவலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

தற்கொலை

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியிலும், சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சிவலிங்கம் இறந்தார். இதுகுறித்து தட்சிணாமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் கோபிநாதம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிவலிங்கத்துக்கு கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்றும், அடிக்கடி பணி இடமாற்றம் செய்வதாகவும், வீடு கட்ட வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்ததாகவும், இதனால் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்