தமிழக செய்திகள்

செங்கம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

செங்கம் அருகே கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

செங்கம் அருகே கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிராம மக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்கரியமங்கலம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் பழுது ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 80 மாணவர்கள் படித்து வருகின்றனர். கட்டிடம் இல்லாததாலும், போதுமான இடமில்லாமலும் மாணவர்கள் பழைய கட்டிடத்திலும், மரத்தடியிலும் அமர்ந்து படித்து வருவதாக கூறப்படுகிறது.

புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தரக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அப்பகுதி மக்கள் செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கரியமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலை மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்