தமிழக செய்திகள்

ஆடு-மாடுகளை கடிக்கும் நாய்களை பிடித்து செல்லக்கோரி கிராம மக்கள் மனு

ஆடு-மாடுகளை கடிக்கும் நாய்களை பிடித்து செல்லக்கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்.

தினத்தந்தி

தாந்தோணி ஒன்றியத்திற்கு உட்பட்ட நொச்சிபட்டி, வெடிக்காரம் பட்டி, முஸ்ட கிணத்துப்பட்டி, ஊத்துகரைபட்டி, அத்திபாளையம், செம்மடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் விவசாயத்துடன் சேர்த்து கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்தநிலையில் கடந்த சில நாட்களில் மேய்ச்சலுக்கு சென்ற 28 ஆடுகளை நாய்கள் கடித்த மேலும் ஆடு, கோழிகளையும் கடித்து வருகிறது. இதனால் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் விவசாயிகளின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆடு, மாடு, கோழிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் பிரபுசங்கர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்