தமிழக செய்திகள்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தைகிராம மக்கள் முற்றுகை

நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

தினத்தந்தி

பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலைகொழுந்துபுரம் கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தங்கள் ஊரில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கருவேல மரங்களை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், "எங்கள் ஊரில் புறம்போக்கு நிலத்தில் உள்ள கருவேல மரத்தை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மூலம் ஏலம் விடப்பட்டது. எங்கள் சமுதாயத்திற்கு அறிவிப்பு இல்லாமல் இந்த ஏலம் விடப்பட்டுள்ளது. இதனால் அங்கு இரு சமுதாயத்தினர் இடையே மோதல் ஏற்படும் நிலை உள்ளது. எங்கள் தெருவுக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கால்நடைகளை மேய்த்து வருகின்றோம். மேலும் பெண்கள், குழந்தைகள் அந்த வழியாகத்தான் ஆற்றில் குளிக்க செல்வார்கள். இந்த கருவேல மரங்களை வெட்ட வந்தால் எங்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள். எனவே முன்அறிவிப்பு இல்லாமல் நடந்த பொதுப்பணித்துறை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை