தமிழக செய்திகள்

விழுப்புரம்: சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

விழுப்புரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

தினத்தந்தி

மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் போலீசார் நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தனர்.

பின்னர், அவர்கள் அலுவலகத்தின் ஜன்னல், கதவுகளை உள்புறமாக பூட்டிக்கொண்டு தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் சிக்கியது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அலுவலக நேரம் முடிந்த பிறகு இரவு நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்