தமிழக செய்திகள்

மின்சார வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு - முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

விழுப்புரத்தில் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்று இரவு சுமார் 9.45 மணியளவில் விழுப்புரம் மரக்காணம் வட்டம், பிரம்ம தேசம் கிராம எல்லை பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் வைத்திருந்த மின்கம்பியில் சிக்கி வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த திரு.முருகதாஸ் (வயது 45), திரு.வெங்கடேஷ் (வயது 44), மற்றும் மகன் திரு.சுப்பிரமணி (வயது 40) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிருந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்