தமிழக செய்திகள்

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு வக்கீல்கள் சங்கத்தினர் வரவேற்பு

திருக்கோவிலூருக்கு வருகை தந்த விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு வக்கீல்கள் சங்கத்தினர் வரவேற்பு

திருக்கோவிலூர்

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா திருக்கோவிலூரில் உள்ள முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று வருடாந்திர ஆய்வு பணிக்காக வருகை தந்தார். அவரை திருக்கோவிலூர் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி பத்மாவதி, திருக்கோவிலூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு வெங்கடேஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து திருக்கோவிலூர் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் மூத்த வக்கீல் செல்வராஜ் முன்னிலையில் முன்னாள் அரசு வக்கீலும், வக்கீல் சங்க முன்னாள் தலைவருமான எஸ்.ரஜினிகாந்த் முதன்மை நீதிபதி பூர்ணிமாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அவருடன் சங்கத்தின் பொறுப்பு தலைவர் வக்கீல் எஸ்.கே.ராஜ்குமார், செயலாளர் சுவிஜி.சரவண்ணகுமார், நிர்வாகி தமிழ்செல்வன் மற்றும் வக்கீல்கள் பாண்டு, பாலகிருஷ்ணன், கோடீஸ்வரன், சுனில்குமார் உள்ளிட்ட வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல்துறையினர் உடன் இருந்தனர். பின்னர் முதன்மை நீதிபதி பூர்ணிமா ஆய்வு பணியை மேற்கொண்டார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு