தமிழக செய்திகள்

ஊரடங்கு உத்தரவு மீறல்; ரூ.2.68 கோடி அபராதம் விதிப்பு

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக ரூ.2.68 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் மே 3ந்தேதி வரை அமலில் இருக்கும். தமிழகத்தில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. இதனை மீறி மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2 லட்சத்து 68 ஆயிரத்து 537 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 39 ஆயிரத்து 770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ.2 கோடியே 68 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை கடந்த 16ந்தேதி முதல் திரும்ப ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்