தமிழக செய்திகள்

ஊரடங்கு உத்தரவு மீறல்; தமிழகம் முழுவதும் 1.94 லட்சம் வழக்குகள் பதிவு

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 1.94 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 8 ஆயிரத்து 139 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1.94 லட்சம் வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன

தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 79 ஆயிரத்து 827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ.89 லட்சத்து 23 ஆயிரத்து 644 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை இன்று முதல் திரும்ப ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு