தமிழக செய்திகள்

விராலிமலை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

விராலிமலை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

விராலிமலை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் மண்டையூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர் முருகன் வரவேற்று பேசினார். இதில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, வரும் 2026 இல் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். அதற்கு விராலிமலை தொகுதியில் உள்ள 255 பூத் கமிட்டி தலைவர்கள் சிறப்பாக பணியாற்றி பா.ஜ.க. ஆட்சி அமைய களப்பணியாற்ற வேண்டும் என்றார். கூட்டத்தில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பார்வையாளர் பழ. செல்வம், மேற்கு மாவட்ட பொருளாளர் முருகானந்தம், மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் கார்த்திகேயன், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணைத் தலைவரும், விராலிமலை கிழக்கு ஒன்றிய பார்வையாளருமான ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மாநில, மாவட்ட, மண்டல, நிர்வாகிகள், அணி பிரிவு தலைவர்கள், மண்டல செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை விராலிமலை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு