தமிழக செய்திகள்

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

புகழ்வாய்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இது தமிழ்நாட்டுக்கே பெருமையான தருணம் ஆகும்.

கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் போன்ற மாசற்ற நேர்மையும், பரந்த அனுபவமும் கொண்ட ஒருவர் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருப்பதால் இந்த விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும். உலக செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்க்கடி துவார்கோவிச்சுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சுமுகமாக நடத்துவதில் அவருடைய பங்கு இன்றியமையாதது. தலைவராக அவருடைய முதல் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்ததை போல 2-வது பதவிகாலமும் அமையும் என நம்புகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை