கன்னியாகுமரி,
விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 25ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். குடியரசு தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சண்முகராஜேஸ்வரன் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் விழாவில் பங்கேற்பார் என்றும் அதன் பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு புகழ்பெற்ற பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று அவர் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.