தமிழக செய்திகள்

குரல் பரிசோதனை: நிர்மலாதேவியை சென்னை அழைத்துச் செல்லலாம் ஐகோர்ட்டு அனுமதி

குரல் பரிசோதனைக்காக நிர்மலாதேவியை சென்னைக்கு அழைத்துச்செல்ல மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

தினத்தந்தி

மதுரை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக தொலைபேசியில் பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானது.

இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நிர்மலாதேவிக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்ய மதுரையில் உரிய வசதி இல்லாததால், அவரை சென்னைக்கு அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், நிர்மலாதேவியை குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை அழைத்துச் செல்வதற்கு வருகிற 27-ந் தேதி (நாளை) முதல் 29-ந் தேதி வரை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு