தமிழக செய்திகள்

கைப்பந்து போட்டி: தமிழ்நாடு அணியில் விளையாட கரூர் மாணவர் தேர்வு

தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணியில் விளையாட கரூர் மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.

தினத்தந்தி

தமிழ்நாடு ஹேண்பால் சங்கம் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அணிக்கான கைப்பந்து வீரர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி மாணவர் நவீன்குமார் தமிழ்நாடு கைப்பந்து அணிக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ளார். இதையடுத்து நவீன்குமாரை கல்லூரி, பேராசிரியர்கள், சக மாணவ- மாணவிகள் பாராட்டினர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது