தமிழக செய்திகள்

விருப்ப ஓய்வு கோரிய சகாயம் ஐ.ஏ.எஸ். பணியிலிருந்து விடுவிப்பு

விருப்ப ஓய்வு கோரி அரசுக்கு விண்ணப்பித்திருந்த சகாயம் ஐ.ஏ.எஸ். தற்போது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

இளைஞர்களால் பெரிதும் மதிக்கத்தக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விளங்கி வருபவர் சகாயம் ஐ.ஏ.எஸ். ஆவார். தமிழக அறிவியல் நகர துணைத்தலைவர் பொறுப்பில் பணியாற்றி வந்த இவர், இதற்கு முன் பல்வேறு பொறுப்புகளில் இருந்த போது, பணியில் நேர்மையாக செயல்பட்டவர் என்று பாராட்டப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வில் செல்லவுள்ளதாக அரசுக்கு முறைப்பட விண்ணப்பித்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று சகாயம் ஐ.ஏ.எஸ். பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சகாயம் ஐ.ஏ.எஸ். அரசியலில் இறங்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து சமூக வலைதளங்களில் பலர் விவாதம் செய்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு