தமிழக செய்திகள்

நாமக்கல் அருகே தனியார் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

நாமக்கல், ராசிபுரம் அருகே தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினத்தந்தி

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குருசாமி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் குருசாமிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

கடந்த மார்ச் 9-ம் தேதி சத்து மாத்திரை சாப்பிட்ட ஊட்டியைச் சேர்ந்த மாணவி பாத்திமா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து