தமிழக செய்திகள்

9,697 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை தயார்

தேனி மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த 9,697 பேருக்கு தபால் மூலமாக வினியோகம் செய்யப்பட உள்ளது.

தினத்தந்தி

வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்யப்பட்டு வாக்காளர்களின் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் இணையதளம், தேர்தல் பிரிவு அலுவலகங்கள், சிறப்பு முகாம்கள் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை வேண்டியும், புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டியும் விண்ணப்பிப்பவர்களுக்கு அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி வரையிலான காலகட்டம் வரை வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்த 9 ஆயிரத்து 697 வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் அடையாள அட்டை அச்சடிக்கப்பட்டுள்ளது. அவை தபால் துறை மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. எனவே, பொதுமக்கள் தங்களின் முகவரியில் இருந்தபடியே வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். தங்கள் பகுதிக்கான தபால்காரர்கள் வீடுதேடிச் சென்று அடையாள அட்டையை வழங்குவார்கள். இத்தகவலை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்