தமிழக செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம்; ரேஷன் கடை பணியாளர்களுக்கு எச்சரிக்கை

ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனை மீண்டும் வழங்க வேண்டும், கடைகளில் பழுதடைந்துள்ள விற்பனை முனைய எந்திரங்களை உடனுக்குடன் வட்ட பொறியாளர்களே சரிசெய்து தர வேண்டும், பழுதடைந்த நிலையில் இருக்கும் ரேஷன் கடை கட்டிடங்களை சீரமைக்க வேண்டும், ரேஷன் கடை பணியாளர்களுக்கான ஊதியம், மாதத்தின் முதல் நாளே வழங்க ஆவன செய்யப்பட வேண்டும் என்பன போன்ற 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் நாளை மறுநாள் முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.. போராட்டத்தில் ஈடுபடும் அனைத்து நாட்களுக்கும் ஊதியம் பிடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை