சென்னை,
காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 3 உதவி ஆய்வாளர்கள், 10 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 21ம் தேதி குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக 26 போலீசார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்
இந்த நிலையில் ஆவடி காவல் ஆணையர் பரிந்துரை பேரில் 13 காவலர்களை வெளி மாவட்டங்களுக்கு மாற்றி டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.