தமிழக செய்திகள்

மதுவிலக்கு வேண்டி நடைபயணம்

திருச்சி முதல் ஈரோடு வரை மதுவிலக்கு வேண்டி காந்தியவாதி நடைபயணம் செல்கிறார்.

தினத்தந்தி

மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 53). காந்தியவாதியான இவர், இந்தியாவில் மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்த வேண்டும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மதுபானம், போதை பொருட்களை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தேசிய கொடியுடன் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சியில் கடந்த மாதம் 9-ந் தேதி நடைபயணத்தை மேற்கொண்ட அவர், புதுச்சேரி, சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக சேலம் வந்தார். பின்னர் அவர் சேலம் 4 ரோடு, புதிய பஸ்நிலையம், சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து சென்று மதுவிலக்கு வேண்டி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஈரோட்டில் குடியரசு தினத்தன்று பயணத்தை முடிக்கிறார். 48 நாட்கள் நடைபயணத்தை மேற்கொள்ளும் கருப்பையா, மொத்தம் 800 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்கிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்