தமிழக செய்திகள்

சீர்காழி கோவில்பத்து சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் காத்துக்கிடப்பதால் சீர்காழி கோவில்பத்து சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளர்.

தினத்தந்தி

சீர்காழி;

அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் காத்துக்கிடப்பதால் சீர்காழி கோவில்பத்து சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளர்.

ரெயில்வே கேட்

சீர்காழி பனங்காட்டாங்குடி சாலையில் கோவில்பத்து என்ற இடத்தில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை கடந்துதான் கோவில்பத்து, பனமங்கலம், அகனி, தென்னங்குடி, வள்ளுவக்குடி, நிம்மேலி, மருதங்குடி, புங்கனூர், ஆதமங்கலம், பெருமங்கலம், கொண்டல், அகர எலத்தூர், பனங்காட்டாகுடி மற்றும் சீர்காழி நகர் பகுதியில் இருந்து புறவழிச்சாலை வழியாக சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும்.

இந்த நிலையில் இந்த ரயில்வே கேட் 30 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் வந்து செல்வதால் அடிக்கடி மூடப்படுகிறது.

அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

இதன் காரணமாக சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன. 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வாகனங்களும் காத்து கிடக்கும் நிலை உள்ளது. இதனால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படும் நிலையும் இருந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட் மூடப்படும் போதும் சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கின்றன.

ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்

ரயில்வே கேட் திறக்கும் போது வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்லும் போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அரசு பணங்காட்டாங்குடி சாலையில் கோவில்பத்து கிராமத்தில் விரைவில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அரசுக்கு பல ஆண்டுகளாக எதிர்பார்த்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்