தன்னை தாக்கி வரும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்கி வருகிறது. அந்தவகையில் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஈரான் தாக்குதல் நடந்தது. எனவே அந்த நாட்டு வான் பரப்பு முழுமையாக மூடப்பட்டது. இதனால் அமீரகம் முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டது.
இதனால் அபுதாபி, துபாய், சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமான நிலையங்களில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் பாதுகாப்பாக விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
அதன்படி எமிரேட்ஸ், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்கள், தங்களது விமான சேவை தற் காலிகமாக நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதனால் துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு செல் லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரான் மீது தாக்குதல் தொடரும் நிலையில் சென்னையில் இருந்து புறப்படும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, ஏர் ஆகாஷ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் விமானங்கள் ரத்தாகின. விமானங்கள் ரத்து காரணமாக பயணிகள் கடும் அவதிக்க்கு உள்ளாகினர்.