சேலம்
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாநகரில் விபத்தை குறைக்கும் வகையில் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தை ஓட்ட கூடாது. இதை மீறினால் அந்த மாணவர்கள் மீதும், அவர்களின் பெற்றோர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல், 3 பேர் அமர்ந்து சென்றாலோ அல்லது நான்கு சக்கர வாகனத்தில் சீட்பெல்ட் அணியாமல், செல்போன் பேசிக்கொண்டு சென்றாலோ, ஒருவழி பாதையில் எதிர்திசையில் சென்றாலோ மற்றும் போக்குவரத்து விதிகள் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.