தமிழக செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தம்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சுற்றுச்சூழல் மாசு காரணமாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இதற்கிடையே 2-வது கட்ட கொரோனா அலையில் இந்தியா திக்குமுக்காடி கொண்டிருந்தது. 2-வது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்பட்டது. இதனால் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மூன்று மாத காலத்திற்கு, அதாவது ஜூலை 31-ந்தேதி வரை ஆலையை திறக்க அனுமதி கொடுத்தது. அதன்பின் ஆக்சிஜன் தேவையைப் பொறுத்து, நீட்டிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று காலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு