தமிழக செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடியை கொண்டது. மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய நிலவரப்படி 3,064 மில்லியன் கன அடி நீர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 780 கன அடியாக உள்ள நிலையில், ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு