தமிழக செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாக சரிவு

நீர்வரத்து குறைந்திருந்தாலும் அங்குள்ள கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விலக்கப்படவில்லை.

தினத்தந்தி

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. நீர்வரத்து குறைந்திருந்தாலும் அங்குள்ள கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விலக்கப்படவில்லை.

அதே சமயம் கடந்த 36 நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது