தமிழக செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.68 அடியாக குறைவு

மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாக கணக்கிடப்படுகிறது. இந்த அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது.

இந்நிலையில் அண்மைக் காலமாக டெல்டா மாவட்டங்களில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாத காரணத்தால், பாசனத்திற்கான தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. எனவே மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அணையின் நீர்மட்டம் 73.06 அடியில் இருந்து 72.68 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 9,018 கன அடியாக உள்ள நிலையில் அணையில் தற்போது 35.04 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு